இரண்டு கால்களில் வேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய் (Video)

இரண்டு கால்களில் வேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய் (Video)

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 11:15 am

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

கோன் ஜோ என்று அழைக்கப்படும் பாப்பிலா, ஜேக் ரசல், சிகுவாகுவா என்று மூன்று இனத்தின் கலப்பில் பிறந்த அந்த நாய் 5 மீட்டர் தூரத்தை வெறும் 2.39 நொடிகளில் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளது.

இதற்கு முன்னர் ஜிப் என்று அழைக்கப்படும் பொமேரியான் நாய் ஒன்று 7.76 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

முழுதாக ஒரு கிலோ கூட எடை இல்லாத (907 கிராம்) இந்தக் குட்டி நாய் தனது 2 முன்னங்கால்களால் ஓடி இந்த சாதனையைப் புரிந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்