அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 9:45 am

அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக
ஆணைக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அரசியலில் செயற்பாடுகளில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைவாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர், பொறுப்பான அமைச்சுக்கள், தேர்தல்கள் செயலகம், நிறுவனங்கள் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்