20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் சமர்பித்து ஒருவாரத்திற்குள் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யலாம்

20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் சமர்பித்து ஒருவாரத்திற்குள் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யலாம்

20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் சமர்பித்து ஒருவாரத்திற்குள் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யலாம்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 7:21 am

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மக்கள் மனு தாக்கல் செய்ய முடியும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அது தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட மாட்டாதென பிரதி சபாநாயகர் குறிப்பிடுகின்றார்.

இரண்டு வாரங்கள் முடிவில் அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிலிருந்து ஒரு வார காலத்திற்குள் நாட்டின் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கும், அதுகுறித்து விளக்கமளிப்பதற்கும் சந்தர்ப்பம் காணப்படுவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

இந்த மனுக்கள் தொடர்பில் மூன்று வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன், அதன் பின்னரே அரசியலமைப்பு திருத்தம் மீது விவாதம் நடத்துவதற்கான திகதி பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் என்றும் பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்