யாழ். நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்படுத்தியவர்களில் 36 பேருக்கு பிணை

யாழ். நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்படுத்தியவர்களில் 36 பேருக்கு பிணை

யாழ். நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்படுத்தியவர்களில் 36 பேருக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 1:06 pm

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைதான 36 பேருக்குப் இன்று (18) பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 36 சந்தேகநபர்களும் யாழ். நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாக இரு வழக்குகள் நீதிமன்றில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

யாழ்.சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய வழக்கின் சந்தேகநபர்களையும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்திய பிறிதொரு வழக்கின் சந்தேகநபர்களும் 5 லட்சம் ரூபா இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து பிணையாளிகளும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் பிறிதொரு வழக்கில் கைசெய்யப்பட்டால் குறித்த பிணை ரத்துச் செய்யப்படும் எனவும் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்