மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சி – கயந்த கருணாதிலக்க

மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சி – கயந்த கருணாதிலக்க

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 6:09 pm

மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தின் செயற்திட்டங்களை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் இது தொடர்பில்
சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவூட்டினர்.

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்ததாவது;

[quote]ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தூய்மையான ஒற்றுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தின் செயற்திட்டங்களை சீர்குலைக்க முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றனர். அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்காக மக்கள் ஆணையை வழங்கவில்லை. அவர்களை வீட்டிற்கு அனுப்பி புதிய ஆட்சியொன்றை இந்த நாட்டிற்குள் உருவாக்குவதற்கே மக்கள் ஆணையை வழங்கினார்கள். பொதுத்தேர்தலின் போது யார் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் எனவும், நம்பிக்கையில்லாதவர்கள் யார் எனவும் மக்கள் தெளிவாக தீர்மானிப்பார்கள்.[/quote]

சமூக சேவை மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது;

[quote]ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக தோல்வியடைந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டவண்ணமுள்ளனர். என்றுமே இது இடம்பெறாது என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக நியமித்தால், அவர் ஜனாதிபதியாவதற்கு ரவையொன்று மாத்திரமே செலவாகும் என தனிப்பட்ட ரீதியில் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த சந்தர்ப்பத்தில் கூறினார்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்