மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 9:04 am

மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டையிழந்த நிலையில் விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் 30 வயதான முச்சக்கர வண்டி சாரதியும், அதில் பயணித்த 50 வயதுடைய மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹியங்கனை ஊரணிய பகுதியைச் சேர்ந்த சிலரே விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்