மதுபாவனை மூலம் வடக்கிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகப் பணம் கிடைக்கிறது – ஜனாதிபதி

மதுபாவனை மூலம் வடக்கிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகப் பணம் கிடைக்கிறது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 8:54 pm

பாடசாலை மாணவர்களை போதைப்பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கான விரிவான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

காலி ரிச்மண்ட் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மதுபாவனை மூலம் வடக்கிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகப் பணம் கிடைப்பதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, வித்தியாவின் கொலைச் சம்பவத்தின் பின்னர் இதுபற்றி பலரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

அத்துடன், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் மதுபாவனை விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனிதப் பண்புள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பு தமக்கிருப்பதாகவும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்