பிரேசிலில் இளம் பெண்களைக் கொன்று சமைத்து சாப்பிட்ட மூவர் கைது

பிரேசிலில் இளம் பெண்களைக் கொன்று சமைத்து சாப்பிட்ட மூவர் கைது

பிரேசிலில் இளம் பெண்களைக் கொன்று சமைத்து சாப்பிட்ட மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 4:07 pm

பிரேசில் நாட்டில் 3 பெண்களைக் கொன்று அவர்களை சமைத்து சாப்பிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் பெல்ட்ராவ் நீகுரோமாண்ட் (வயது 54), இசபெல் (வயது 54) தம்பதிகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை.

இந்நிலையில், ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2 ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார்.

இதனையடுத்து, இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
எனினும், புரூனா வழியாகவும் ஜோர்ஜூக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள சாலை வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்ளனர்.

அதன்பின்பு, ஜோர்ஜ் மற்றும் அவரது 2 மனைவிகளும் சேர்ந்து அந்தப் பெண்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் அந்தப் பெண்களை சமையலறையில் வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இவர்களது பேச்சால் ஈர்க்கப்பட்டு கொலையான அனைவரும் 17, 20 மற்றும் 21 வயது கொண்ட இளம்பெண்கள். அவர்களில் ஜெசிகா (வயது 17) என்ற இளம்பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து பாசம் காட்டி வளர்த்து வந்துள்ளனர். அதனை தங்களது குழந்தையாக மாற்ற முயற்சி செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே ஜெசிகாவை அவர்கள் கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.

இதற்கு அடிப்படைக் காரணம் 2 ஆவது மனைவி புரூனா என ஜோர்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் சமைத்த பின் ஜெசிகாவின் மாமிசத்தை அவரது குழந்தைக்கும் ஊட்டியுள்ளனர். ஜோர்ஜின் முதல் மனைவி இசபெல் மாமிசத்தை கடைகளில் விற்றுவந்துள்ளார். 3 ஆவது பெண்ணைக் கொன்ற பின், அவரது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியபோது பொலிஸாரிடம் இந்தக் கும்பல் பிடிபட்டது.

ஜோர்ஜ் கைது செய்யப்பட்டு அவருக்கு 23 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Jorge-Silveira-and-Isabel-Pires

PAY-Bruna-Cristina-Oliveira-da-Silva


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்