நியூசிலாந்துடனான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

நியூசிலாந்துடனான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

நியூசிலாந்துடனான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 9:15 am

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது சா்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நொட்டிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவா்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 90 ஓட்டங்களையும்,  எலியட் 55 ஓட்டங்களையும் மார்ட்டின் குப்டில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனா்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி , பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினா்.

350 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44 ஓவா்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஓட்டங்களையும், மோர்கன் 113 ஓட்டங்களையும் ஜோ ரூட் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனா்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மாட் ஹென்ரி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினாா்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக மோர்கன் தெரிவானார்

05 போட்டிகள் கொண்ட இத்தொடாில் 02 அணிகளும் சமநிலையிலுள்ள நிலையில் இத்தொடாின் வெற்றியைத் தீா்மானிக்கும் 05வதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்