தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை எமக்கு கையளிக்க வேண்டும் – T.B. ஏக்கநாயக்க

தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை எமக்கு கையளிக்க வேண்டும் – T.B. ஏக்கநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 5:40 pm

தேர்தலை நடத்தாவிடின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் T.B. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

[quote]பாராளுமன்றம் ஒரு நாள் கூடுவதற்கு சாதாரணமாக 19 இலட்சம் செலவாகும். நாளையுடன் அனுதாபச் செய்திகள் நிரல் முடிவடைகின்றது. இந்த இயலாமையுடன் நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்காது தேர்தலுக்கு செல்ல வேண்டும் அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை எமக்கு கையளிக்க வேண்டும் என்பதே எமது யோசனையாகும்.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்