தெற்கு கரோலினா தேவாலயத்தினுள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

தெற்கு கரோலினா தேவாலயத்தினுள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

தெற்கு கரோலினா தேவாலயத்தினுள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 3:50 pm

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள தேவாலயத்தினுள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

இனவெறி காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு கரோலினாவில் ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொள்ளும் பழமைவாய்ந்த தேவாலயம் உள்ளது.

இங்கு புதன்கிழமை பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் சாலையில் ஓடத் தொடங்கினர்.

அமைதியை ஏற்படுத்த சார்லெஸ்டன் பகுதி பாதிரியார்கள் ஒன்று கூடி சாலைகளில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்திய நபர் குறித்த மர்மம் நீடிக்கிறது. இது குறித்து சார்லெஸ்டன் தலைமை பொலிஸ் அதிகாரி கூறும்போது, “தேவாலயம் உள்ளே நுழைந்த நபரின் வயது 20 ற்கும் குறைவானதாகக் கருதப்படுகிறது, என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்