ஜுராசிக் வேர்ல்ட் ஹீரோவை பயமுறுத்திய டைனோசர்கள் (Video)

ஜுராசிக் வேர்ல்ட் ஹீரோவை பயமுறுத்திய டைனோசர்கள் (Video)

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 11:07 am

ஜுராசிக் வேர்ல்ட் என்ற பெயரில் டைனோசர்கள் பற்றிய படம் கடந்த 12ம் திகதி வெளியாகி உலகம் முழுவதும் கலக்கிக் கொண்டிருக்கின்றது.

வெளிவந்து நான்கு நாட்களில் இப்படம் 511 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க ரசிகர்களை பொருத்தவரை சுமார் 48 சதவீதம் பேர் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படத்தின் ‘3-டி’ பதிப்பை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்துள்ளதாக ஹொலிவூட் சினிமா பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

மொத்த வசூல் சாதனையில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் ‘அவதார்’ படத்தின் அசுர சாதனையை இந்த ‘டைனோசர்’ முறியடிக்கும் என கூறப்படுகிறது.

ஹொலிவூட் நடிகர் கிறிஸ் பிராட், இவர் குட்டி குட்டி டைனோசர்களுக்கு பயிற்சி கொடுப்பவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பட படப்பிடிப்பிற்காக, படப்பிடிப்பு தளத்திற்குள் வரும் கிறிஸ்ஸை, தொழில்நுட்ப குழுவினர் குட்டி டைனோசர்களைக் காட்டி பயமுறுத்தி வரவேற்ற காட்சி வீடியோவாக வெளிவந்து  பரவி வருகிறது.

படப்பிடிப்பு தளத்திற்குள் நுழையும் கிறிஸ்ஸை ஒளிந்திருக்கும் இரண்டு குட்டி டைனோசர்கள் பயமுறுத்துகின்றன. அடுத்தடுத்து திடீர் என வரும் டைனோசர்களைப் பார்த்து பயந்து போகிறார் கிறிஸ்.

பின்னர் சுதாகரித்து எழுந்து தொழில்நுட்ப குழுவை பாராட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்