சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள் இம்முறை மன்னாரில்

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள் இம்முறை மன்னாரில்

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள் இம்முறை மன்னாரில்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 10:06 pm

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களை இந்த வருடம் மன்னாரில் கோலாகலமாக நடத்த இலங்கை ஒலிம்பிக் குழு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம், 23 ஆம் திகதி மன்னாரில் நடத்தப்படவுள்ள இந்த நிகழ்வுகளுக்கு இலத்திரனியல் ஊடக அனுசரணையை ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் வழங்கவுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் பேரவை 1894 ஆம் ஆண்டில் ஜூன் 23 ஆம் திகதியை சர்வதேச ஒலிம்பிக் தினமாக பிரகடனப்படுத்தியது.

அதற்கமைய அன்று முதல் வருடாந்தம் ஜூன் 23 ஆம் திகதி சர்வதேச ஒலிம்பிக் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த வருடமும் சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்தவுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஒலிம்பிக் குழு தெரிவித்தது.

விளையாட்டின் மூலம் நல்லிணக்கம் என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்