கோல்டன் கீ முதலீட்டாளர்களின் பணத்தில் 41 வீதத்தை வழங்க அரசாங்கம் இணக்கம்

கோல்டன் கீ முதலீட்டாளர்களின் பணத்தில் 41 வீதத்தை வழங்க அரசாங்கம் இணக்கம்

கோல்டன் கீ முதலீட்டாளர்களின் பணத்தில் 41 வீதத்தை வழங்க அரசாங்கம் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 11:40 am

கோல்டன் கீ முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தில் 41 வீதத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இன்று (18) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய 2 மில்லியனுக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளும், இரண்டு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரை முதலீடு செய்தவர்களுக்கு இரண்டு மாதத்திற்குள்ளும், பத்து மில்லியனுக்கும் அதிக பணத்தை வைப்பிலிட்டவர்களுக்கு ஒரு வருடத்திற்குள்ளும் பணத்தை மீள வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு உயர்நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை தொடர்பான அமைச்சரவையின் அறிக்கையை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம், பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்