கிராமிய வீதி அபிவிருத்திக்கு தேர்தல் தொகுதி ஒன்றுக்கு 300 இலட்சம் ஒதுக்கீடு – அரசாங்கம்

கிராமிய வீதி அபிவிருத்திக்கு தேர்தல் தொகுதி ஒன்றுக்கு 300 இலட்சம் ஒதுக்கீடு – அரசாங்கம்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 6:28 pm

கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு தேர்தல் தொகுதிக்கு தலா 300 இலட்சம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் தெரிவித்தார்.

தடைப்பட்டுள்ள அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாவட்ட செயலாளர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

உரிய வழிமுறையின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது, கிராமிய வீதி வேலைத் திட்டங்களை முடிவிற்குக் கொண்டு வரவே எண்ணியுள்ளதாகவும் கூடுதலான நிதியை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேர்தலின் பின்னர் அபிவிருத்திகளைப் பாரியளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்