கம்பஹா பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கம்பஹா பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கம்பஹா பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 1:21 pm

கம்பஹா பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த இருவரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா அளுத்கம பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதவராவார்.

எனினும் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இறந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அகுன்கல பகுதியில் மனைவியை கூரிய ஆயுத்தில் தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.கூரிய ஆயுதத்தினால் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.

குடும்ப தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு குழந்தையின் தாயான 24 வயதான நிமலி பிரியங்க என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பெந்தோட்டை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் தம்புளை பகுதியில் ஆற்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் தம்புள்ளை பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கபடவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்