கடும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

கடும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

கடும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2015 | 7:45 am

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மலையகத்தில் அவ்வப்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பல வீதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

அத்துடன் மக்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

இன்று (18) காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மழை பெய்து வருவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு ஹட்டன் டிக்கோய நகர சபையும் ஹட்டன் பொலிசாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்