ஆண்டிமுனை ஆலயத்தில் திருடியவர் கைதானார்

ஆண்டிமுனை ஆலயத்தில் திருடியவர் கைதானார்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2015 | 5:01 pm

உடப்பு ஆண்டிமுனை ஶ்ரீ இராக்குரிசி எல்லையம்மன் ஆலயத்தை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்டிமுனை ஶ்ரீ இராக்குரிசி எல்லையம்மன் ஆலயம் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம் களவாடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினால் முந்தல் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தினுள் ஒருவர் நுழைவதை அவதானித்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சந்தேகநபரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவரிடமிருந்து களவாடப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆலயம் உடைக்கப்பட்டு, பணம் களவாடப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்