மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை

மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை

மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 12:57 pm

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளினதும் மீனவப் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இறுதியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக அமைச்சின் செயலாளர் நிமல் ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.

வருடத்தின் குறித்த சில நாட்கள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும் இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் இரு தரப்பு மீனவர் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இணக்கப்பாடு இதுவரை ஏற்படவில்லை என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 14 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது 33 படகுகளும் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்