மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்த நால்வர் கைது

மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்த நால்வர் கைது

மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்த நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 10:40 am

அனுராதபுரத்திலுள்ள பொது மயானமொன்றில் அடக்கம் செய்யப்பட்டிருந்த யுவதி ஒருவருடைய சடலத்தை தோண்டியெடுத்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18,20,22 மற்றும் 28 வயதான நான்கு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதைகுழியில் அமைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தட்டை உடைத்து சந்தேகபர்கள் சடலத்தை வெளியே எடுத்துள்ளனர்.

இந்த சடலம் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்த 20 வயதான யுவதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தில் இருந்த காதணிகளை சந்தேகபர்கள் திருடியமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்