புதிய தேர்தல் முறைமைக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் ​வெளியிடப்பட்டது

புதிய தேர்தல் முறைமைக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் ​வெளியிடப்பட்டது

புதிய தேர்தல் முறைமைக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் ​வெளியிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 7:33 am

மேலதிக வர்த்தமானியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன் தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களை அச்சிடும் பணிகள் இன்று (17) அதிகாலை ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

237 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

புதிய திருத்தத்தின் ஊடாக விருப்பு வாக்கு முறைமை நீக்கப்படவுள்ளது.

தொகுதி மற்றும் விகிதாசார முறைமைக்கு அமைய பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்