தஞ்சம் கோருவோர் விடயத்தில் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவிப்பு

தஞ்சம் கோருவோர் விடயத்தில் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவிப்பு

தஞ்சம் கோருவோர் விடயத்தில் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 11:11 am

புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபர்ட் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தற்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கி புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகொன்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு
வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் நேற்று (17) எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அபர்ட் பதிலளித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஆட்கடத்தற்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கியதாக இலங்கையின் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்றை அவுஸ்திரேலிய அதிகாரிகள் அண்மையில் திருப்பி அனுப்பினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்