பிரித்தானிய மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது பேயா? (Photos)

பிரித்தானிய மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது பேயா? (Photos)

பிரித்தானிய மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது பேயா? (Photos)

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 3:26 pm

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஊழியர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தென்படும் பேய் போன்ற உருவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள West Yorkshire நகரில் Leeds General Infirmary என்ற மருத்துமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் Andrew Milburn என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரப் பணிக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் தனது காதலியுடன் எஸ்.எம்.எஸ் மூலம் உரையாடிக் கொண்டிருந்துள்ளார் Andrew Milburn.

அவர் மருத்துவமனையில் இருப்பதை அவரது காதலி நம்பாததால், குழந்தைகள் பகுதியான Clarendon Wing இன் நடைபாதையை தனது தொலைபேசியில் படம்பிடித்து அனுப்ப முயற்சித்துள்ளார்.

இதன்போது, புகைப்படத்தில் வௌ்ளை நிற புகை போன்ற உருவம் தென்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை அவர் பேஸ்புக்கிலும் பகிர்ந்துள்ளார். அதனைப் பலர் பேய் என நம்புகின்ற அதேவேளை, அந்தப் படம் photoshop இல் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என சிலர் நம்புகின்றனர்.

இருப்பினும் அதை Andrew Milburn நிராகரித்துள்ளார்.

Alleged-ghost-sighting-in-Leeds-General-Infirmary

Alleged-ghost-sighting-in-Leeds-General-Infirmary1

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்