பருப்பு மீதான இறக்குமதி வரி குறைப்பு: எண்ணெய்க்கு அதிகரிப்பு

பருப்பு மீதான இறக்குமதி வரி குறைப்பு: எண்ணெய்க்கு அதிகரிப்பு

பருப்பு மீதான இறக்குமதி வரி குறைப்பு: எண்ணெய்க்கு அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 10:01 pm

இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மீதான விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவிலிருந்து 25 சதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக சந்தையில் பருப்பின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேங்காய் எண்ணெய் தவிர்ந்த உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஏனைய எண்ணெய் வகைகளில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் 1 கிலோகிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 90 ரூபா வரி, 110 ரூபா வரை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்