பதிவு தபால் விநியோகத்தில் பாதிப்பு

பதிவு தபால் விநியோகத்தில் பாதிப்பு

பதிவு தபால் விநியோகத்தில் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 9:19 am

பதிவு தபால் விநியோக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருமளவிலான பதிவு தபால்கள் குவிந்து கிடப்பதே இதற்கு காரணமாகும்.

பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற பதிவு தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்னவிடம் வினவியபோது ஊழியர்கள் பற்றாக்குறையே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மேலதிக தபால் ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் மாஅதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்