நிதி மோசடி விசாரணைப் பிரிவை இரத்து செய்யக் கோரும் மனு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 5:08 pm

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டவிரோதமானது எனத் தெரிவித்து அதனை இரத்து செய்வதற்கான தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்தல் விடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எல்லே குணவங்ச தேரர் மற்றும் பேராசிரியர் கார்லோ பொன்சேக்கா, ரொஹான் வெலிவிட்ட ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மாஅதிபருக்கும் பொலிஸ் மாஅதிபருக்கும் அறிவித்தல் விடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மனுதாரர்கள் அழைப்புக் கடிதங்களை அனுப்பத் தவறியமையால் மனுவை ஜூலை மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்