தேநீர் அருந்தியதால் நோய்வாய்ப்பட்ட 79 பேர்: தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேநீர் அருந்தியதால் நோய்வாய்ப்பட்ட 79 பேர்: தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 9:09 pm

தோட்ட நிர்வாகத்தினரின் கவனயீனத்தைக் கண்டித்து ஹப்புத்தளை, பிட்டரத்மலை தோட்ட மேற்பிரிவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆம் திகதி ஹப்புத்தளை, பிட்டரத்மலை மேற்பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தோட்டத்தொழிலாளர்கள் சிலர், அருகிலுள்ள ஊற்றில் இருந்து நீரை எடுத்து தேனீர் தயாரித்து அருந்தியுள்ளனர்.

தேனீர் அருந்திய சில நிமிடங்களின் பின்னர் சுமார் 79 தோட்டத்தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டதுடன், அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தோட்ட நிர்வாகத்தின் கவனயீனத்தினாலேயே இவ்வாறு தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து பிட்டரத்மலை தோட்ட மேற்பிரிவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஹப்புத்தளை, பிட்டரத்மலை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கான தீர்வு தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில், தோட்ட நிர்வாகத்தினரை சந்திப்பதற்கு எமது செய்தியாளர்கள் சென்றிருந்தனர்.

எனினும், இதற்கான பதிலை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்