திபிலிசியில் வௌ்ளம்: 14 பேர் பலி, தப்பிச்சென்ற சிங்கம் ஒருவரைக் கொன்றுள்ளது

திபிலிசியில் வௌ்ளம்: 14 பேர் பலி, தப்பிச்சென்ற சிங்கம் ஒருவரைக் கொன்றுள்ளது

திபிலிசியில் வௌ்ளம்: 14 பேர் பலி, தப்பிச்சென்ற சிங்கம் ஒருவரைக் கொன்றுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 4:18 pm

​ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் உள்ள வெர் ஆற்றில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் வரையில் காணாமற்போயுள்ளனர்.

இந்நிலையில், திபிலிசியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றிலிருந்த மிருகங்கள் பலவும் வௌ்ளம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அங்கிருந்த சில மிருகங்கள் தப்பித்து நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன.

அவ்வாறு தப்பித்த சிங்கம் ஒன்று ஒருவரைக் கொன்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 விலங்குகளில் பாதிக்கும் மேலான பறவைகளும் மீன்களும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சிங்கம், புலி மற்றும் நீர்யானை போன்ற விலங்குகள் தப்பித்து சென்றிருந்த நிலையில், அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்த சில விலங்குகளை பாதுகாப்பிற்காக படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

காணாமற்போயுள்ள விலங்குகளைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வௌ்ளம் காரணமாக குறித்த மிருகக்காட்சிசாலையில் பணியாற்றிய
பெண் உட்பட மூன்று ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

EPA-ONE-USE-ONLY-Tbilisi-Georgia4 floods-in-Tbilisi-Georgia 3 floods-in-Tbilisi-Georgia floods-in-Tbilisi-Georgia2Tbilisi-floods7 Tbilisi-floods8 Tbilisi-floods9 Tbilisi-floods10 Tbilisi-Georgia12 Tbilisi-Georgia13 Tbilisi-Georgia14

 

Tbilisi-Georgia6

EPA-ONE-USE-ONLY-Tbilisi-Georgiajpg5


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்