தலைப்பிறை தென்படாததால் 19 ஆம் திகதி முதல் ரமழான் நோன்பு நோற்குமாறு அறிவிப்பு

தலைப்பிறை தென்படாததால் 19 ஆம் திகதி முதல் ரமழான் நோன்பு நோற்குமாறு அறிவிப்பு

தலைப்பிறை தென்படாததால் 19 ஆம் திகதி முதல் ரமழான் நோன்பு நோற்குமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 8:19 pm

புனித ரமழான் மாத தலைப்பிறை இன்று தென்படாத காரணத்தினால் எதிர்வரும் 19 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை முதல் ரமழான் நோன்பு நோற்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1436 இன் ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கூடியது.

நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தலைப்பிறை தென்பட்டமைக்கான உரிய ஆதாரங்கள் பதிவாகாததை அடுத்து 19 ஆம் திகதி முதல் புனித ரமழான் மாதத்தை அனுஷ்டிப்பதற்கு பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்