தரம் ஒன்றிற்கான அனுமதியின் போது  அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை

தரம் ஒன்றிற்கான அனுமதியின் போது அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை

தரம் ஒன்றிற்கான அனுமதியின் போது அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 9:55 am

அடுத்த வருடம் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிக்கும்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன் நெருங்கிப் பழகுவோரின் பிள்ளைகளை சட்டவிரோதமாக பாடசாலைகளில் சேர்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனால் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாத பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே தமது கொள்கை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய சுற்றுநிருபம் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்