சஜின் டி வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

சஜின் டி வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2015 | 12:45 pm

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன மற்றும் ஜனாதிபதி செயலக ஜாதிக்க சவிய திட்டத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான முன்னாள் இணைப்புச் செயலாளர் ஆகி​யோர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகபர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 22 வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வாகனமொன்று போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட நிலையில் நாராஹேன்பிட்டியில் உள்ள வாகன திருத்துமிடமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான மேலும் ஐந்து வாகனங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அந்த வாகனங்கள் தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்