அமெரிக்க ஜனாதிபதியின் விஜயம்: எதுவும் தெரியாது என்கிறது வெளிவிவகார அமைச்சு

அமெரிக்க ஜனாதிபதியின் விஜயம்: எதுவும் தெரியாது என்கிறது வெளிவிவகார அமைச்சு

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 10:17 pm

வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

ஷெனுக்கா செனவிரத்ன ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்ட காலத்தில் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தை திருத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கும் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதிலளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் இந்த வருட இறுதியில் அவர் ஆசிய நாடுகளுக்கான விஜயம் ஒன்றில் ஈடுபடவுள்ளதால் இலங்கை வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இருப்பினும், இதற்கு முன்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு வருகை தந்ததில்லை, ஆதலால் அவரின் விஜயம் தொடர்பில் தம்மால் எதுவும் தெரிவிக்க முடியாது, என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்