ஹொலிவூட்டின் வசூல் சாதனைகளை முறியடித்த ஜுராஸிக் வேர்ல்ட்

ஹொலிவூட்டின் வசூல் சாதனைகளை முறியடித்த ஜுராஸிக் வேர்ல்ட்

ஹொலிவூட்டின் வசூல் சாதனைகளை முறியடித்த ஜுராஸிக் வேர்ல்ட்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2015 | 12:48 pm

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜுராஸிக் வேர்ல்ட் உலக அளவில் சில வசூல் சாதனைகளை புரிந்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இப்படம் உலகம் முழுவதும் 3280 கோடிகளை வசூல் செய்து, முதல் மூன்று தினங்களுக்கான வசூலில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜுராஸிக் வேர்ல்ட் அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை 4,274 திரையரங்குகளில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் அமெரிக்காவில் மாத்திரம் 204 மில்லியன் டொலர்களை இப்படம் வசூலித்தது.

படத்தின் நேற்றய தினத்திற்கான அமெரிக்க பெற்றுக்கொள்ளப்பட்ட வசூல் 208.8 மில்லியன் டொலர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

த அவெஞ்சர்ஸ் படம் முதல் மூன்று தினங்களில் 207.4 மில்லியன் டொலர்கள் வசூல் செய்ததே இதுவரை அமெரிக்காவின் சிறந்த வசூலாக இருந்துள்ளது, அதனை இப்படம் முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் முதல் மூன்று தினங்களில் இப்படம் 315.6 மில்லியன் டொலர்களை வசூல் செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்