ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளிடம் விசாரணை தொடர்கிறது

ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளிடம் விசாரணை தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2015 | 9:31 pm

ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 7 நாட்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரும் மற்றுமொரு நபரும் வத்தளை பிரதேசத்தில் மூன்று கிலோ கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து, பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

விநியோகிக்கப்பட்ட போதைப்பொருள், குறித்த நாள் முடிவடைவதற்கு முன்னர் வழங்கப்படும் என பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சந்தேகநபர்கள் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த பகுதிக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்