மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையம் கால்நடைகளுக்கும் மிளகு காய வைக்கவுமா?

மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையம் கால்நடைகளுக்கும் மிளகு காய வைக்கவுமா?

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2015 | 9:24 pm

மத்தளை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கை நாளாந்தம் ஒரு விமான சேவை என்ற ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த விமானம் கட்டுநாயக்கவில் இருந்து மத்தளைக்குச் சென்று அங்கிருந்து அபுதாபி நோக்கிப் பயணிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

தற்போது, விமான நிலைய நுழைவாயிலில் கால்நடைகளை அவதானிக்க முடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் இருந்த பாதுகாப்பு வேலிகளின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளமையால், கால்நடைகள் உட்பிரவேசிப்பதற்கு பல நுழைவாயில்கள் உருவாகியுள்ளன.

வீதியின் மின்குமிழ் கட்டமைப்பு செயற்படாமையினால், காட்டு யானைகள் இரவில் சஞ்சரிப்பதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படுகிறது.

நிலத்தடியில் காணப்பட்ட மின் கட்டமைப்பின் பகுதிகளை சிலர் வெட்டிச் சென்றமையாலேயே, மின்குமிழ்கள் ஒளிராமல் காணப்படுகின்றன.

அதிக நிதியை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த நுழைவாயில் கட்டமைப்பில் தற்போது மிளகு காயவைக்கப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்