போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன் கைது

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன் கைது

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2015 | 1:30 pm

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவை சார்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தாயார் மற்றும் மகன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

120 கஞ்சா பொதுகளுடன் பயணித்து கொண்டிருந்த வேளையில் வத்தளை பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தாய் மற்றும் மகன் இருக்கும் பகுதிக்கு சென்று போதைப் பொருளை விநியோகித்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

மூன்று சந்தேக நபர்களும் வத்தளை பொலிஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்