தென் கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தொற்றினால் 154 பேர் பலி

தென் கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தொற்றினால் 154 பேர் பலி

தென் கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தொற்றினால் 154 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2015 | 12:22 pm

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே 20ஆம் திகதிதி சவுதி அரேபியாவிலிருந்து தென் கொரியா திரும்பிய நபருக்கு முதன் முதலில் மேர்ஸ் (மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மூச்சுத்திணறல் நோய்) தாக்கியது கண்டறியப்பட்டது.

அவரைத் தொடர்ந்து இந்த நோய் தென்கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. மேர்ஸ் நோய் தாக்கி, தென் கொரியாவில் நேற்று மாத்திரம் 3 பேர் பலியாகியதாகவும், நோய் பரவும் ஆபாயம் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோலில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு மாத்திரம் நோய் முற்றிலும் குணமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் பல நகரங்களைச் சேர்ந்த 154 பேர் இதுவரை இந்த நோயினால் பலியானதாக சினுவா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயாளிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்ற சாரதிக்கும் நோய் ஏற்பட்டதனால் நோய் தொடர்பான அச்சம் மக்களுக்கு அதிகரித்துள்ளது.

நோய் அறிகுறிகளுடன் இருக்கும் சுமார் 5,000 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்