திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2015 | 10:33 am

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் 40 இற்கும் அதிகமான விசேட உயிரினங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்