சிறுவர்க​ளுக்கு அழுத்தங்கொடுத்தால் சட்ட நடவடிக்கை: செயலணியொன்றை ஸ்தாபிக்கத் தீர்மானம்

சிறுவர்க​ளுக்கு அழுத்தங்கொடுத்தால் சட்ட நடவடிக்கை: செயலணியொன்றை ஸ்தாபிக்கத் தீர்மானம்

சிறுவர்க​ளுக்கு அழுத்தங்கொடுத்தால் சட்ட நடவடிக்கை: செயலணியொன்றை ஸ்தாபிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2015 | 5:05 pm

இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக சிறுவர்க​ளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன் பொருட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சட்ட மாஅதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதித்துவம் அடங்கலாக செயலணிக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் இ​ளையோருக்கு தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாக மன அழுத்தங்களை ஏற்படுத்துதல், அவர்களைப் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் அல்லது அச்சுறுத்தி பணம் அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த செயலணி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்