English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
16 Jun, 2015 | 4:46 pm
எகிப்தின் முன்னாள் அதிபர் முகம்மது மோர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவற்றுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மோர்ஸிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்லாமிய சகோதரத்துவக் குழுவின் தலைவரான கைரத் எல்-ஷதெர் உள்ளிட்ட அக்குழுவின் பிற 16 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சிறை தகர்ப்பு சம்பவம் தொடர்பில் மோர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனை விவகாரத்தின் இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை. இது குறித்து, எகிப்தின் தலைமை மதகுருவின் கருத்திற்காக நீதிமன்றம் காத்திருக்கிறது.
இந்த தண்டனை அபத்தமானது என இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி ஏற்கனவே விமர்சித்திருந்தது.
மோர்ஸியின் ஆட்சிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டில் மக்கள் புரட்சியில் ஈடுபட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்து, சித்திரவதை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அதற்காக 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார் மோர்ஸி.
27 Aug, 2020 | 10:42 AM
25 Feb, 2020 | 05:32 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS