உடவலவ பகுதியில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

உடவலவ பகுதியில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

உடவலவ பகுதியில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2015 | 1:40 pm

உடவலவ கொலம்பகே ஆறு பகுதியில் 17 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது மாணவனின் சடலம் உடவளவை பிரதேசத்திலுள்ள தேக்கு மர காட்டில் இருந்து நேற்று (15) அதிகாலை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இந்த மாணவன் பிரத்தியேக வகுப்பொன்றில் கலந்துகொள்வதாகத் தெரிவிதது, நேற்று (14) முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தினால், அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 மற்றும் 21 வயதான இரண்டு சந்தேகநபர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காதல் தொடர்பினால் ஏற்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்