கேள்விகளுக்கு அவுஸ்திரேலியா தெளிவாக பதிலளிக்கவில்லை – இந்தோனேஷியா

கேள்விகளுக்கு அவுஸ்திரேலியா தெளிவாக பதிலளிக்கவில்லை – இந்தோனேஷியா

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2015 | 6:16 pm

இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகை திசைதிருப்புவதற்கு இலஞ்சம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்த தமது கேள்விகளுக்கு அவுஸ்திரேலியா உரிய தெளிவுபடுத்தல்களை வழங்கவில்லை என இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவின் எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகள் உரிய வகையில் இல்லாமையே இவ்வாறான சம்பவங்களுக்குக் காரணமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகை சர்வதேச கடற்பரப்பில் திசை திருப்புவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் இந்தோனேஷிய கப்பலோட்டிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக படகிலிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், கப்பலோட்டிகள் தம்மை இந்தோனேஷியாவுக்கு மீள அழைத்துச் சென்றிருந்ததாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கபட வேண்டுமென அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகள், ஐ.நா சபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் முற்றாக நிராகரித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்