தனது தங்கையுடன் இளவரசர் ஜோர்ஜ் (PHOTOS)

தனது தங்கையுடன் இளவரசர் ஜோர்ஜ் (PHOTOS)

தனது தங்கையுடன் இளவரசர் ஜோர்ஜ் (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2015 | 10:11 am

கேம்ப்ரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ் தனது தங்கையுடன் இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்கள் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் தம்பதியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானியா அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் தம்பதிக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்குஅவர்கள் சார்லட் எலிசபத் டயானா என்று பெயரிட்டனர்.

இளவரசி சார்லட்டை அவரது சகோதரர் இளவரசர் ஜோர்ஜ் தனது மடியில் வைத்து கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் தம்பதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர்  சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்களை இரண்டு வாரங்களுக்கு முன்பு இளவரசி கேட் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்கள் தனது தங்கைக்கு முத்தமிடுவது போலும், கெமராவை பார்த்து இருவரும் சிரிப்பது போன்றும் உள்ளன.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

pr_pr_002

G2

G3


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்