வித்யாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

வித்யாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

வித்யாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 1:30 pm

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து, புத்தளத்தில் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை புங்குடுதீவு மாணவிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர், பாடசாலையில் இருந்து ஆரம்பமான அமைதிப் பேரணி, உடப்பு வைத்தியசாலை சுற்றுவட்டத்தை சென்றடைந்து, மீண்டும் பாடசாலையை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பான சுலோகங்களை ஏந்தியிருந்த மாணவர்கள், அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டதுடன், புங்குடுதீவு மாணவிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்