ரவிராஜ் கொலை: முச்சக்கரவண்டி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு 

ரவிராஜ் கொலை: முச்சக்கரவண்டி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு 

ரவிராஜ் கொலை: முச்சக்கரவண்டி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 7:52 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முச்சக்கரவண்டி தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன், ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்