பா.விஜய் இயக்கி நடிக்கும்  படத்தில் பாடினார் சித்தார்த்

பா.விஜய் இயக்கி நடிக்கும் படத்தில் பாடினார் சித்தார்த்

பா.விஜய் இயக்கி நடிக்கும் படத்தில் பாடினார் சித்தார்த்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 2:28 pm

திரைப்பட பாடல் ஆசிரியரான பா.விஜய் ‘ஞாபகங்கள்,’ ‘இளைஞன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர், ‘ஸ்ட்ராபெரி’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்து டைரக்டும் செய்திருக்கிறார். இது, ஒரு பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்காக, நடிகர் சித்தார்த் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் பா.விஜயின் வரிகளில் அமைந்த ”இது பூக்கதை இல்ல…பேய் கதை…இது ஊர் கதை இல்ல…உன் கதை…” என்று தொடங்கும் பாடலாகும்.

இந்த பாடலுக்கு தாஜ்நூர் இசையமைத்து இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது இசையமைப்பாளர்கள் டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் தலா ஒரு பாடலை பாடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

படத்தில், பா.விஜய் ஜோடியாக அவ்னிமோடி நடித்துள்ளதுடன் தேவயானி, சமுத்திரக்கனி, தம்பிராமய்யா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் உடன் இணைந்து நடித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்