டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகள்: 100 மீற்றர் ஓட்டத்தில் அதிசிறந்த காலப்பெறுதி பதிவு

டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகள்: 100 மீற்றர் ஓட்டத்தில் அதிசிறந்த காலப்பெறுதி பதிவு

டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகள்: 100 மீற்றர் ஓட்டத்தில் அதிசிறந்த காலப்பெறுதி பதிவு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 8:56 pm

டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டத்தில் அதிசிறந்த காலப்பெறுதியை அமெரிக்காவின் ஜஸ்டின் கெட்லின் நிலைநாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், 100 மீற்றர் ஓட்டத்திலான உலக சாதனை தொடர்ந்தும் ஜமைக்காவின் உசைன் போல்ட் வசமே உள்ளது.

14 கட்டங்களைக் கொண்ட டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காவது கட்டம் இத்தாலியின் தலைநகரான ரோமில் நடைபெற்றது.

ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 9.75 நொடிகளில் கடந்த அமெரிக்காவின் ஜஸ்டின் கெட்லின் போட்டி சாதனையுடன் வெற்றிபெற்றார்.

இந்த சாதனை உசைன் போல்ட் வசமிருந்ததுடன் அவர் 2012 ஆம் ஆண்டில் 9.76 நொடிகளில் போட்டியை நிறைவுசெய்திருந்தார்.

எவ்வாறாயினும், 100 மீற்றரை 9.57 நொடிகளில் போல்ட் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது.

மகளிருக்கான 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அவுஸ்திரேலியாவின் ஷெலி பியர்சன் விபத்திற்குள்ளானார்.

இதன் காரணமாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

போட்டியை 12.52 நொடிகளில் பூர்த்திசெய்த அமெரிக்காவின் ஷரீகா நெல்விஸ் தனது சிறந்த காலப்பெறுதியுடன் வெற்றியீட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்