ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க செயற்றிட்டங்களுக்கு பான் கீ மூன் பாராட்டு

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க செயற்றிட்டங்களுக்கு பான் கீ மூன் பாராட்டு

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க செயற்றிட்டங்களுக்கு பான் கீ மூன் பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 6:55 pm

இலங்கையின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து அனைத்து இனத்தவர்களுக்கும் இடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடனான அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் அதனை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட பிரயத்தனம் தொடர்பில் பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டில் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தொலைபேசி கலந்துரையாடலின் போது பான் கீ மூனிடம் கூறியுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் பான் கீ மூன் இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்