சுற்றாடல் சமனிலையை பேணுவதற்கு புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சுற்றாடல் சமனிலையை பேணுவதற்கு புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சுற்றாடல் சமனிலையை பேணுவதற்கு புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2015 | 7:09 am

வனங்கள் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், காடழிப்பை தடுப்பதற்கும், சுற்றாடல் சமனிலையை பேணுவதற்கும் புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களை தராதரம் பாராது, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சூழலையும், உயிர்களையும் நேசிக்கும் பரம்பரையை உருவாக்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சூழலை பாதுகாத்து, சிறப்பான நாளையை உருவாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மனிதனுக்கு களத்தினை அமைத்துக்கொடுக்கும் இயற்கை சூழலினை தட்டிக்கழிக்கின்றமை மாபெரும் கொடுமை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், மனிதனிற்கும், சூழலிற்கும் இடையிலான தொடர்பினை அனுபவித்துணரக் கூடிய சிறார்கள், அதனை பாதுகாக்க முன்வர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

சூழல்நேய வாழ்க்கை முறையின் ஊடாக பூமித் தாயினை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அனைவரும் உறுதி பூண வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்