சுமத்ரா தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 3000 ​பேர் வெளியேற்றம்

சுமத்ரா தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 3000 ​பேர் வெளியேற்றம்

சுமத்ரா தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 3000 ​பேர் வெளியேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 3:39 pm

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினாபங் மலையில் எரிமலைக் குழம்புகள் அதிக அளவில் வெளியாகி வருவதால், அப்பகுதியில் வசித்து வரும் 3000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சினாபங் மலையிலிருந்து புகையுடன் கூடிய சூடான சாம்பல் வெளிவந்து கொண்டிருப்பதுடன் எரிமலைக் குழம்பும் அதிகளவில் வெளிவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையை அண்டிய நான்கு கிராமங்களில் வசிக்கும் 3000 பேர் வரையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் எரிமலை இருக்கும் பகுதியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்